"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் - பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் - இளைப்பில்லை காணென்று கும்மியடி!                
காத லொருவனைக் கைப்பிடித்தே, அவன் - காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும் - மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!"   -பாரதி-
1. வையமீதிலே Play Download this Song
2. ஒருகாலம் Play Download this Song
3. நாளைவிடியல் Play Download this Song
4. மண்ணிலே.. Play Download this Song
5. அம்மா.. Play Download this Song
6. வானொலி நிகழ்ச்சி Play Download this Song
7. இஸ்லாத்தில் பெண்கள் Play Download this Song

Editor's Choice

கவிதை

நான் பெண்!

நான் பெண்!

நான் பெண்என் சின்னஞ்சிறு உலகம்எப்போதும் இருட்டுக்குள்!

கட்டுரைகள்

பால்நிலை வேறுபாடுகள்

மனித இனம் என்பதற்கு அப்பால் ஆண்-பெண் என்ற பாகுபாடு அம்மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே பார்க்கப்பட்டு வருகிறது. காலத்திற்குக் காலம் நோக்குகைகள் வித்தியாசப்பட்டாலும் ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு பேணப்பட்டு வருகின்றது. இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பண்புகள், குணாதிசயங்கள் இருபாலாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகவே நடைமுறைச்...

ஆலோசனை

ரிஸானாவின் மரணத்துக்கு யார் பொறுப்பு?

ரிஸானாவின் மரணத்துக்கு யார் பொ…

      ரிஸானா நஃபீக். 2005 ஆம் ஆண்டு முதல் இந்தப் பெயர் ஊடகங்களில் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. அந்தப் பரபரப்பான பெயருக்குரிய இலங்கையைச் சேர்ந்த இளம் யுவதிக்கு (09/01/2013) புதன்கிழமை காலை இலங்கை நேரம் 11.40 மணிக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை...

ஃபலஸ்தீன்

நிலமெல்லாம் ரத்தம் - 30 - பா.ரா

நிலமெல்லாம் ரத்தம் - 30 - பா.ர…

மூன்றாவது சிலுவைப்போரில் வெற்றி பெற்றபிறகு சுல்தான் சலாவுதீன் நெடுநாள் உயிர்வாழவில்லை.

பேட்டிகள்

ஒரு பெண்ணின் வெற்றியும் சிறப்பும் அவளின் அறிவிலும் ஆற்றலிலும் ஆளுமையிலுமே தங்கியுள்ளன – லறீனா அப்துல் ஹக்!

ஒரு பெண்ணின் வெற்றியும் சிறப்ப…

 1. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் குடும்ப, கல்விப் பின்னணி உள்ளிட்டு எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

நூலாய்வு

கவிதை எழுதும் கதைகள்: புதியமாதவி

கவிதை எழுதும் கதைகள்: புதியமாத…

      சமூகத்தில் பெண்கள் எழுத வந்தபோது பெரிய அதிர்வுகள் ஏற்பட்டன. இதுவரை சமூகம் கடைப்பிடித்த அறம், அறம் சார்ந்த விழுமியங்கள் சரியத் தொடங்கின. அறம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது என்ற அடிப்படை உண்மை ஆணித்தரமாக முன்வைக்கப்பட்டது. பொது அறம் என்ற வெளி...

நமது ஆளுமை

  • 1
  • 2
Prev Next
'மனதைத் தொடுவதற்கு புதுக்கவிதைக்கே முடியும்; மனம் விட்டுச் சொல்கிறேன்' - எச். எஃப். றிஸ்னா

'மனதைத் தொடுவதற்கு புதுக்கவிதை…

"உண்மையான கருத்துகளைப் புதுக் கவிதை மூலமே சொல்ல முடியும். மரபுக் கவிதை என்ற பழைமைக்குள்ளிருந்து கொண்டு புதுமையைப் பார்க்க முடியாது." இப்படி துணிவுடன் கூறுகிறார் ஹப்புத்தளை எச். எப். றிஸ்னா. "புதுக்கவிதை என்றால் வசனத்தைப் பிரித்துப் போடுவது; அதில் அர்த்தம் பொதிந்திருக்காது; நினைத்தவரெல்லாம்...

2011.03.08 சர்வதேச மகளிர் தினத்தின் தொனிப்பொருள் (சிறப்புக் கட்டுரை)

2011.03.08 சர்வதேச மகளிர் தினத…

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது வெறுமனே ஒரேயொரு தினக் கொண்டாட்டமாக அமையாமல், மார்ச் மாதம் முழுக்க அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, கலாசாரம் முதலான இன்னோரன்ன துறைகளில்...

"சரித்திரத்தின் விளிம்பிலாவது வளர ஆசைப்படுகிறேன்': வெலிகம ரிம்ஸா முஹம்மத்

"சரித்திரத்தின் விளிம்பில…

மாத்தறை, வெலிகமவைச் சேர்ந்த கவிதாயினி வெலிகம ரிம்ஸா, முஹம்மத் – லரீபா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார். இவர் வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக் குயில் என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருகிறார்.

மலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக்

மலையகத்தின் இலக்கியத் தாரகை நய…

ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மலையக இலக்கியம் புது இரத்தம் பாய்ச்சியது என்ற பேராசிரியர் கைலாசபதியின் கூற்றிற்கிணங்க, மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உந்துசக்தியான வகிபாகத்தை வகித்த, மலையகப் பெண் படைப்பிலக்கியவாதிகளை நாம் கவனத்தில் கொள்வது புறந்தள்ள முடியாத அதிமுக்கிய விடயமாகும். அந்த வகையில்...

  • Latest News
  • Popular

துயர்...

நிராசையின் மதுவை இட்டுநிரப்புகிறாய்
வெறுப்பின் திரவம் நுரைத்துச் சுழிக்கிறது
வெடித்துப் பிளந்த மனத்தரிசுக்குள்
குரோதத்தின் வெம்மை தீய்த்து எரிக்கிறது
மனிதம் மரித்து இராக்கதம் மிகைத்ததை
விதிர்விதிர்ப்புடன் எதிர்கொள்ளும் தருணத்தில் 
வாய்பிளந்து நெளியும் அரவத்தின் நாவுபோல்
மனக்கிண்ணம் தளும்பி விளிம்பிகந்து
நிரம்பிவழிகிறது கசப்பின் சுவை...

~ லறீனா ஏ. ஹக் ~

தானே மழையாகிப் பெய்யும் எதுவும் பேசாத மழை நாள்

இன்னும் முகையவிழாத பிறை

கொஞ்சம் கொஞ்சமாய் காந்தி

திரியாகிப் பற்ற வைக்கிறது

திசைகளை 

புள்ளியாய் விரியும் பெருநாள்

உலகமகா பாவிகளின் 

கிழிசல்களைத் தைத்து

கந்தல்களைத் துவைத்து...

பெருநாளினை எதிர்கொள்ள ஆவலோடு காத்திருந்த புனித நோன்பு நாளொன்றில், கரம் வந்து சேர்ந்திருந்த சகோதரர் நபீலின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்ட, 'எதுவும் பேசாத மழை நா'ளின் மூன்றாவது கவிதையின் சில வரிகளிவை. கவிதைகளூடே இதுகாலவரை கண்டு ரசித்த பிறையினின்றும் மிகவும் மாறுபட்ட வடிவேந்தி மிளிர்கிறது, இன்னமும் முகையவிழாத இப்பெருநாள்பிறை.

பக்கமொன்றைத் தாண்டாத வகையிலான 50 இற்கும் அதிகமான கவிதைகள் இத்தொகுப்பில் உண்டு.

கடலின் பல்வேறு வகிபாகங்களையும் தன் முதல் தொகுப்பின் வரிகளுக்குள் விரிந்த காட்சிகளுடே நிகழ்த்திக் காட்டிய கவிஞர், இதிலே மழையின் பல்வேறு புறதிருப்பங்களையும் அது செயற்படுத்தும் வெவ்வேறு மந்திர வித்தைகளையும் தானே மழையாகிப் பெய்திருக்கிறார்.

பகலை மூடும் இவரது மழை, மரங்களுக்கு கொண்டை முடிவதில் ஆனந்திக்கிறது. தன் தாரைகளைத் திசையெங்கிலும் செழித்த மரமாக்கின்றது. ஈரமுற்றத்தில் வைகறை பதிக்கின்றது. சின்னஞ்சிறிய பந்தலாகிச் சொட்டுகிற தறுவாயில் வானவில் தொங்கும் மூலையில் தேனீரருந்துகிறது. குதிரைகள் பூட்டப்பட்ட படையெடுப்பாக வெள்ளத்தை அலைய விடுகிறது. அடைமழையாகி விளக்கேற்றுகிறது. கோபமாய் புள்ளியிடுகிறது. தூவானமாகி ஜன்னலருகே பயம்பயமாய் தெறிக்கிறது. ஒரு கணத்தில் கனலாகி இவரை வறுக்கும் மழை, மறுகணம் ஒரு குழந்தை போலே பின்னால் அழுது கொண்டும் வருகிறது. மேலும்,  வேறோரு கவிதையில் இம்மழையின் துவக்கத்தை கடல் படாது மழை படாது என வெகு கச்சிதமாய் கூறுகிறார். கடைசியாகப் பெய்த மழை இரக்கமில்லாமல் தன் மணல் வீட்டைச் சரித்ததாலோ என்னவோ தான் எழுதும் போது மட்டும் எதுவும் பேசாமல் பொழியும் இம்மழை இவரைப் பயங்கொள்ளவும் வைக்கிறது.

தொகுப்பிலுள்ள வசீகரமான கவிதைகளிலொன்று கடல் தெருக்கள்.

"மிக எளிய வரிகள் கொண்டு 

அதிராதிருக்கும் தொனியில், 

சிணுங்கும் மீன்களென்ன" யார் பாடினாலும் அழகுதானே! 

அடியாழ நீரின் அற்புத அமைதியை அழகாய் மிதக்க விட்டிருக்கிறார் தன் 'கடல் தெருக்கள்' கவிதையில்.

குழலினிது யாழினிது என்பார், தம்மக்கட் மழலைச் சொல் கேளாதவர் எனும் தொன்மங்களுக்குள் எமை அழைத்துப் போகின்றன, 'தொலைத்தவர்கள் தொலைந்தனர்' எனும் இகுழந்தைகள் தொடர்பான கவிதையின் சில வரிகள்.

மேலும்,  "என்னைத் தனிமையானவனாகவே

          எப்போதும் பார்க்கிறேன்....         

          என் இமைகளும் இறகுகளும்           

          தனித்திருத்தலின் வலியை        

          கண்ணீராய் ஒழுக விடுகிறது" எனப் பரிவினை அவாவி நிற்கின்றன, பிரிவு தொடர்பான சில வரிகள்.

பொருளாதார மேம்பாட்டுக்கான பெருநகரங்கள் நோக்கிய இடம் பெயர்வுகளும் அது தொடர்பான பதிவுகளும் நமக்கொன்றும் புதிதில்லை. ஆனாலும், பெரும்பாலான அண்மையக் கவிதைகளில் நகரவாழ்க்கையின் நேர், எதிர் இயல்புகளைக் கூடுதலாகவே காணக்கிடைக்கின்றன. "கடிகாரம் காட்டாத நேரம்" இவ்வகைக் கவிதைகளிலொன்று.

"வேகமான விசித்திர வீதிகளில் அலைகிறேன்.

பெருநகரங்கள் எனை நீரால் நிரப்புகின்றன.

நிரம்பிக் கொண்டே இருக்கிறது வயிறு........

................................................................

எப்பொழுதும் கேட்க விரும்புகிற நம் நேரத்தை

அந்தக் கடிகாரம் காட்டுவதில்லை." விட்டுப்போக விரும்பாத கிராமத்தின் பசுமையான நேரத்தைப் பெருநகரக் கடிகாரங்கள் எப்போதுமே காட்டியதில்லைதான்.

இதையேதான்,

"பரோல்லில் விடுமுறை பெற்று 

வீடு மீளும் கைதியை ஒப்ப

நான் பெருநகரச் சிறை விலகி 

வெளியே வருகிறேன்.

..........................................

முடிந்தது விடுமுறை 

பசி கொண்ட பூதமென வாய் பிளந்து காத்திருக்கிறது

பெருநகரம்

மீளாச்சிறைக்குள் நான் மீள."

என்கிறது, கவிஞர் திருமாளவன் வரிகள்.

தொகுப்பிலுள்ள உணர்வுபூர்வமான கவிதைகளிலொன்று ஒரு நிலாக்கடல். தன் முகம் தடவி விட்டுப்போன வாப்பாவின் இறுதியாத்திரைக் கணங்களோடு ஒன்றித்திருப்பவை.

"புடைத்த விம்மலில் கடலைப் பார்க்கிறேன்.....

வாப்பா

நீங்கள் மடித்து ஒட்டிய காகிதம்

நான் அஞ்சல்காரன்....

தூரம் பாரமாகி கால் தள்ளாடுகிறது.....

மழை தேடி வானத்தை அண்ணாந்தேன் 

வாப்பா

விண்மீன்களெல்லாம் உங்களுடையவை".

எனும் வரிகளோடு நாமும் வானத்தை அண்ணாந்தால் வானம் கறுப்பாகிக் கிடக்க விண்மீன்களோ எம் விழிகளிலிருந்தும் துளிகளாய் உதிர்கின்றன. எவர் மனதையும் இளக்கிப்போகும் மிக நெகிழ்வான வரிகள்.

இன்னும் சில கவிதைகளில் தன் இணை மீதான இறுக்கங்களை நெருங்கியும் விலகிநின்றும் பேசுகிறார், கவிஞர்.

ஒருசில கவிதைகள் மறுவாசிப்பினைக் கோரிநிற்பவை. ஆனாலும் நாளின் மிகக் குறுகிய பொழுதினில் மாத்திரமே எழுத்து சார்ந்து இயங்கக் கூடிய என்போன்றோரை விடவும் நவீன பின்நவீனச் சூழலில் தொடர்ச்சியாய் இயங்குவோரால் இச்செறிவான வரிகளின் ஆழ அகலங்கள், குறைநிறைகள், அவை அடுத்ததாயும் பயணப் படவேண்டிய திசைகள் தொடர்பிலெல்லாம் விரிவாகப் பேசப்படக்கூடும்.

தொகுப்பின் கடைசிக் கவிதை இது

"அவ்வளவு வேகத்துடன் நீளும் நம் சத்தம்

பைத்தியத்தின் ஒலியெனக்

கதவுகளைத் தாழிடுகின்றனர்."

தன் கவிதைகள் தொடர்பில் கேட்டுச் சலித்த எதிர்வினைகளுக்குள் முளைத்தெழுந்ததோ இக்கவிதை.

முதல் தொகுதிக்குப் போலவே இதற்கும் கவிஞர் சோலைக்கிளியே அணிந்துரை எழுதியிருக்கிறார். கவிதைகளைப் பகுத்தும் பிரித்தும் தாம் வரைந்த சட்டகங்களுக்கூடாக வாசகரை நோக்கச் செய்யாத கவிஞர் சோலைக்கிளியின் நேர்த்தியான அணிந்துரையில், "வாழ்க்கை அழகாக அழகாக, ஒரு படைப்பாளியின் படைப்புகளும் அழகாகும்; ஆழமாகும் என்பதற்கு நபீலின் கவிதைகளும் எடுத்துக் காட்டானவை" எனும் வரிகள் நூலின் கனதியைக் கூட்டக் கூடியவை.

கவிஞர் நபீலின் ஆழமான வாசிப்பனுபவங்களையும் கடுமையான உழைப்பையும் இத்தொகுதியினூடே காணமுடிகிறது . சகோதரரின் தொடர் கவிதை முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி-

நூல் : எதுவும் பேசாத மழை நாள் 

ஆசிரியர்: நபீல்

வெளியீடு : உயிர் எழுத்து

பதிப்பகம் இந்தியா

விலை : 40.00 (இந்தியா விலை)

தொலைபேசி: 0094 714914153

நினைவுக் குறிப்பு

இருபத்தைந்து வருடங்களாய் - நான் சில

கவிதைகள் யாத்துள்ளேன்;

சில பிரிட்ஜெட்டுக்காக - இன்னும் சில

கவிதைக்காக. மேலும் படிக்க...